SDPI - ன் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வியாளர்கள், அறிஞர்கள்,ஆசிரியர்கள், நீண்டகாலமாக சமசீர்க்கல்வியைகோரிவந்த நிலையில் தி.மு.க அரசு அதை ஏற்று கடந்த வருடம் சமசீர்க்கல்வியை 1 - ம் வகுப்பு மற்றும் 6 - ம் வகுப்பு மாணவர்களுக்கு அமுல்ப்படுதியது இவ்வருடம் 2 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரையிலும் 7 முதல் 10 -ம் வகுப்பு வரையிலும் சமசீர்கல்வியை அமுல்படுத்துவதாக அறிவித்து சுமார் 200 கோடி ருபாய் மதிப்பிலான பாடபுத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் சமசீர்கல்வி புத்தகங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி பழைய பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இவ்வருடம் பள்ளிகள் இயங்கும் எனவும் பாடபுத்தகங்கள் அச்சடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 15 - ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆகியோர் பெரும் குழப்பமடைந்துள்ளனர் .
சமசீர்க்கல்வி திட்டத்தை அமுல்படுத்திக்கொண்டே பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை களைய பல வாய்ப்புகள் உள்ளது. எனவே பெற்றோர், மற்றும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை கவனத்தில் கொண்டும், ரூ 200 கோடி மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் வீணாவதை கருத்தில் கொண்டும், இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறே அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இத்துடன் திருச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில தினங்களுக்கு முன் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை அவர்கள் கடந்த 23-5-11 அன்று காலை சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க வின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாக விளங்கிய அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கும் அ.தி.மு.க நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக