| 17 மே 2011 |
தமிழக முதலமைச்சாராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 'உங்கள் தலைமையில் பொறுப்பேற்றுள்ள தமிழக அமைச்சரவைக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் துடிப்பான சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி புதிய வரலாறு படைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.' தமிழக சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. |
“(அவனேவானங்களுக்கும்,பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் (அவன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”
செவ்வாய், 17 மே, 2011
முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்துக் கடிதம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக