சனி, 30 ஏப்ரல், 2011

மோடி மீது புகார் கூறிய ஐபிஎஸ் அதிகாரியின் பாதுகாப்பு வாபஸ்.

sanjeev patஅகமதாபாத்:
குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அந்த மாநில அரசு திடீரென விலக்கிக் கொண்டுள்ளது.

கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டியுள்ளார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.

அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் கூறியுள்ளார்.

மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம் என்றார்.

நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார் பட்.

இப்போது விடுமுறையில் உள்ள பட், தனது ஜூனாகத் நகரில் உள்ள தனது குடும்பத்துக்கு தரப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கும் குடும்பத்துக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு தரப்பட வேண்டும் என மாநில உளவுப் பிரிவு பரிந்துரைத்துள்ளது. ஆனால், என் குடும்பத்துக்குத் தரப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக நேற்று மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. என்னை என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும். என் குடும்பத்தின் பாதுகாப்போடு அரசு விளையாடுவது தான் கவலை தருகிறது என்றார்.

இன சுத்திகரிப்பை நடத்திய ஒருவனுக்கு இவ்வளவு காலம் விசாரணை என்ற பெயரில் தப்பவிட்டு காலத்தை கழிக்கும் அதிகாரவர்கத்தின் நடவடிக்கையை பார்க்கும்  போது இந்தியாவில் இனியும் சிறுபான்மை,சமூகங்களுக்கு நீதி கிடைக்கும்,என்ற நம்பிக்கை  
இல்லை! இது நம்தேசத்தின்  ஜனநாயகத்தன்மைக்கு  மிகவும் மோசமான ஒருஎடுத்துகாட்டாகும்  இந்திய முஸ்லிம்கள் பல்வேறு வகையானபாரபட்சத்திற்க்கு உள்ளாக்கப்படுவதற்க்கு, அரசும் அரசுத்துறையும் மிக மோசமான முன்னூதாரணத்தை  தான்  ஏற்படுத்துகின்றது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக