வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தங்கத்தின் விலை 20320

சென்னை:ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பவுன் ரூ.20,032 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் 2,504. புதன்கிழமை (ஆகஸ்ட் 17) பவுன் ரூ.19,928-க்கும் ஒரு கிராம் 2,491-க்கும் விற்பனையானது.
31.12.2001-ல் ஒரு பவுன் ரூ.2,224-க்கு விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் பவுனுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கச் செயலாளர் சுல்தான் கூறியதாவது:
அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கையால், இப்போது அந்நாடு மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. இதனால் அமெரிக்காவின் டாலரை கொள்முதல் செய்த நாடுகள் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அதிக அளவில் டாலரை கையிருப்பாகக் கொண்ட சீனா உள்ளிட்ட நாடுகள் இப்போது தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது.
இதன் காரணமாக தங்கத்தின் தேவை இப்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதுதான் தங்கத்தின் தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்றார் சுல்தான்.
இதே கருத்தை தெரிவித்துள்ள பல்வேறு வியாபாரிகள், தீபாவளிக்குள் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்டும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தனர்

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!

மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட காதலர் தினமும்(வேலண்டைன்ஸ் டே), பெற்றோர் தினமும் அதுபோல தற்போது பிரபலமாகி வரும் அக்‌ஷய திதியும் விற்பனைக்காக காத்திருக்கும் தினங்களாகும். கல்வித்துறை கூட சந்தைமயமாகிவிட்டது. அனைத்துமே சந்தைமயமாக்கப்பட்டு வரும் காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.
புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும், இறையச்சத்தின் மாதமான ரமலான் வரும்வேளையில் அதுவும் சந்தைமயமாக்கப்படும் சாத்தியம் அதிகமாகும்.பல்வேறு ஆஃபர்களுடன் சந்தை இப்பொழுதே தயாராகிவருகிறது. நட்சத்திர ஹோட்டல்களில் இஃப்தார் பார்டிகளின் புக்கிங் துவங்கிவிட்டது. பல்வேறு வீட்டு உபயோக-எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்பு சலுகையுடன் விற்பனை தூள் கிளப்புகிறது. அரசியல் கட்சிகளும் இஃப்தார் பார்டிக்காக தயாராகும் வேளை இது.
நோன்பின் உச்சபட்ச நோக்கம் இறையச்சமாகும். இதர சிறப்பு தினங்களைப் போலவே ரமலானையும் சந்தை தன்வசப்படுத்த திட்டமிடுகிறது. பக்தி என்பது விற்பனை பொருளாக மாறிவிடக்கூடாது. பசியையும்,தாகத்தையும் கட்டுப்படுத்துவதோடு தனது ஐம்புலன்களையும் அனைத்து விதமான இச்சைகளை விட்டும், தீயச்செயல்களை விட்டும் பாதுகாத்து மனிதனை மாண்புமிக்கவனாக பண்படுத்தி இறைவனுக்கு அஞ்சும் உண்மையான அடியானாக மாற்றுவதுதான் நோன்பின் லட்சியம் என்றால், சந்தையோ ஊணும், உறக்கமும், பொழுதுபோக்கும், அலங்காரத்தையும், ஆடம்பரத்தையும் நமக்கு போதிக்கிறது.
உலகியல் மோகங்களை கட்டுப்படுத்தும் பக்திரீதியிலான வழிகளை கூட சந்தை சும்மாவிடாது என்பதைத்தான் இவை நமக்கு எடுத்தியம்புகிறது.தொலைக்காட்சி சேனல்கள் இப்பொழுதே நிகழ்ச்சி நிரல்களை தயாராக்கிவிட்டன. இரவின் இறுதிப்பகுதியில் இறைவனிடம் மன்றாடி தனது பாவக்கறைகளை போக்கும் நேரத்தில்தான் தொலைக்காட்சியில் ஸஹ்ர் நேர நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின்றன.இடைக்கு இடையே அவ்வப்போது இசையுடன் கலந்த விளம்பரங்களையும் நாம் காணலாம்.
எவ்வளவுதான் நாம் இவற்றிற்கு நியாயம் கற்பித்தாலும், இழந்த இரவுகளை நம்மால் மீட்டமுடியுமா? என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும். சொற்பொழிவுகளையும், கேள்வி-பதில்களையும் நாம் அவ்வப்போது கேட்கத்தான் செய்கிறோம். இவற்றை பின்னர் பதிவுச்செய்த சி.டிக்களிலும் கேட்கலாம். ஆனால் மீண்டும் இதே ரமலானை நாம் அடையமுடியுமா? அல்லது அடுத்த ரமலான் வரை நமது ஆயுள் நீட்டப்படும் என்பது குறித்த உத்தரவாதம் நமக்கு இருக்கிறதா?
கடைசி 10 தினங்களில்தாம் லைலத்துல் கத்ர் எனும் ஆயிரம் மாதங்களை விட சிறப்பானதொரு இரவு வருகிறது.மஸ்ஜிதுகளில் தனிமையில் அமர்ந்து இறைவனுடனான் நெருக்கத்தை அதிகப்படுத்தும் இத்தினங்களில்தாம் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். முந்தைய நாட்களில் அனைத்து தேவைகளையும் முடித்துவிட்டு ரமலானை அமல்களுக்காக பயன்படுத்துவோம் என்ற சிந்தனை நம்மில் மறைந்துப்போய்விட்டதா? அல்லது மரத்துப்போய்விட்டதா? ஆடம்பரங்கள் மற்றும் வீண்விரயத்தின் மாதமா ரமலான்?
வெறும் பட்டினியாலும், தாகத்தாலும் இம்மாதத்தில் நாம் இறையச்சத்தை பெற முடியுமா? இங்கு நபி(ஸல்…) அவர்களின் பொன்மொழி நமது  சிந்தனையை சீராக்க உதவும்! “எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு, அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும் இரவில் நின்று வணங்குபவர்கள் பலர் உள்ளனர்.கண் விழித்திருந்ததை தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை(நூல்:தாரமி).

Score: thoothuonline

செவ்வாய், 12 ஜூலை, 2011

உலக மக்கள் தொகை தினம்:இந்தியாவும்-சீனாவும் இணைந்து கடைபிடித்தன

பீஜிங்:உலகத்தில் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இரு நாடுகளான சீனாவும், இந்தியாவும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை கடைபிடித்தன. வடக்கு சீன நகரமான டியான்ஜினில் நடந்த ஒருங்கிணைந்த அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத் பங்கேற்றார்.
உலக மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக்கொண்ட நாடுகள் என்ற நிலையில் ஒருங்கிணைந்த முறையில் மக்கள்தொகை தினத்தை கடைபிடித்தது பொருத்தமானது என குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். சர்வதேச அளவில் தலைமைத்துவரீதியாக பங்குவகிப்பதில் இரு நாடுகளும் வெற்றிக்கண்டுள்ளதாக கூறிய ஆசாத், பரஸ்பர ஒத்துழைப்பு வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த நயத்தகு எதிர்காலம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 24 மே, 2011

சமச்சீர் கல்வித்திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு SDPI வேண்டுகோள்!

சமச்சீர் கல்வித்திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு SDPI - ன் மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
SDPI - ன் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கல்வியாளர்கள், அறிஞர்கள்,ஆசிரியர்கள், நீண்டகாலமாக சமசீர்க்கல்வியைகோரிவந்த  நிலையில் தி.மு.க அரசு அதை ஏற்று கடந்த வருடம் சமசீர்க்கல்வியை 1 - ம் வகுப்பு மற்றும் 6 - ம் வகுப்பு மாணவர்களுக்கு அமுல்ப்படுதியது இவ்வருடம் 2 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரையிலும் 7 முதல் 10 -ம் வகுப்பு வரையிலும் சமசீர்கல்வியை அமுல்படுத்துவதாக அறிவித்து  சுமார்  200 கோடி ருபாய் மதிப்பிலான பாடபுத்தகங்கள்  அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் சமசீர்கல்வி புத்தகங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி பழைய பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இவ்வருடம் பள்ளிகள் இயங்கும் எனவும் பாடபுத்தகங்கள் அச்சடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 15 - ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆகியோர் பெரும் குழப்பமடைந்துள்ளனர் .
 சமசீர்க்கல்வி திட்டத்தை அமுல்படுத்திக்கொண்டே பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை களைய பல வாய்ப்புகள் உள்ளது. எனவே பெற்றோர், மற்றும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை கவனத்தில் கொண்டும், ரூ 200 கோடி மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் வீணாவதை கருத்தில் கொண்டும், இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறே அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
  இத்துடன் திருச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில தினங்களுக்கு முன் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை அவர்கள் கடந்த 23-5-11 அன்று காலை சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க வின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாக விளங்கிய அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கும் அ.தி.மு.க நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநில தலைவர்  KKSM தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
 

ஞாயிறு, 22 மே, 2011

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடங்கள்-


புதுக்கோட்டை - 29-5-11, குத்தூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, கரம்பக்குடி - மாலை 4.00 மணி - தொடர்புக்கு - 99528 98900

நெல்லை ஏர்வாடி - 21-5-2011, OK மஹால், வடக்கு மெயின் ரோடு - மாலை 4.30 மணி - தொடர்புக்கு - 98941 06384

கும்பகோணம் - 28-5-2011, தாஜ் மகால், செட்டிமண்டபம் - காலை - 10.00 மணி - தொடர்புக்கு - 88257 76645

காரைகால் - 22.5.11, ஷமீரா மகால், காமராஜர் சாலை - மாலை 4.30 மணி- தொடர்புக்கு - 99949 46364
மற்ற பிற இடங்கள் வெகு விரைவில்...

தேசிய அளவிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு ஈருலக பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

              
                  இவன்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.